Posts

Showing posts from January, 2025

வெள்ளைஅங்கிஅணிந்த பாபா - கண் சிமிட்டும் நேரம் வந்து போனார்... அப்போது அவர் கேட்டது: ‘அது...அவ்வளவுதானா?' -அனுராதா ரமணன்.

Image
    ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள்   ஸ்ரீ  சத்யசாயி சங்கீர்த்தனம் அனுராதா ரமணன் ஓம்  ஸ்ரீ   சாயிராம்           ஸ்ரீ   சத்ய சாயியின் பிரியத்துக்குப் பாத்திரமான , அன்புள்ளங்களுக்கு நமஸ்காரம்.      ‘ அனுராதா ரமணன் ' என்கிற நாவலாசிரியையை , எழுத்தாளரை உங்களுக்குத்தெரிந்திருக்கலாம்.ஆனால் , அவளுள்சின்னதும் பெரிசுமாய் துளிர்க்கும் ஆன்மீகப் பூக்களைப் பற்றி...அவை , இது வரையில் சந்தைக்கு வராதபூக்கள்...கடவுளின்விஸ்தாரமானதோட்டத்தில் அரும்பி , மொட்டும் , பூவுமாய்-அவரது காலடியிலேயே சமர்ப்பிக்கப்பட்டவை... ஒரு விதத்தில் , சின்னக்குழந்தைகள்மண்சொப்பு வைத்து , பாவனையாய் சோறுபொங்கிப் பரிமாறுவது போல... அழகான - அந்தரங்கமான- அந்தராத்மாவின் ராக சஞ்சாரங்கள்...      1996- ஆம் வருடம் ஒரு நாள்... புட்டபர்த்தியில் பூத்து , புவனமெங்கும் தன்அருளை இதமாக அளித்துக் கொண்டிருக்கும் ' பகவான்ஸ்ரீ சத்ய சாயி ' பற்றி ஓர் அந்தாதி எழுத ஆரம்பித்தாள் அனு.      விளையாட்டாகத்தான். குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவத...