ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள் பாகம் – 2 கீதா தெய்வ சிகாமணி என் தாத்தா காலத்திலிருந்தே ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா படமும், ஸ்ரீ சத்ய சாயிபாபா படமும் வைத்து தினமும் பூ சாற்றி குறிப்பாக வியாழக் கிழமைகளில் வழிபாடு செய்வது வழக்கம். எனக்கும் என் கணவர் N.தெய்வ சிகாமணி வழக்கறிஞர் அவர்களுக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அப்போது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நாங்கள் மந்தவெளியில் வசித்த போது வியாழக் கிழமைகளில் "சுந்தரம் ஹால் பஜனையில் கலந்து கொள்வது வழக்கம். என் தந்தை பொறியாளர் M.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு 60 வயதில் ஸ்ட்ரோக் வந்து வலது பக்கம் செயலிழந்து போனது. அப்போது எங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சொல்லிமாளாது. அந்த நேரம் சாயிராம் சாயிராம் என பாபாவை நினைத்து வேண்டியபடி இருந்தோம். பகவானின் பேரருளால் சிகிச்சையில் நல்ல பலன் கிடைக்க… மறுபடி இதய பாதிப்பு ஏற்பட்டு பேஸ் மேக்கர் பொருத்த வேண்டிய நிலை. பாபாவை முழுதாக சரணாகதி அடைந்து வீட்டில் பஜன் ஏற்பாடு செய்து முழுமனதாக வணங்க ... பாபாவின் அருட்பார்வை எங்கள் மீது விழுந்தது என்றே சொல்லலாம் . தம்பி மூலம் பணம் ஏற்பாடாக ....