ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள் பாகம் – 1
ஓம் சாய்ராம் யாழ் சுதாகர் வீட்டில் சாயிபாபாவுக்கு போட்ட மாலை வளர்ந் தது அ வர் பெயர் ரகோத்தம்மா (74) எனது இரண்டாவது தாய் , எழுதப் படிக்கத் தெரியாதவர் , கள்ளம் , கபடம் , அறியாதவர். எங்கள் வீட்டில் 15 ஆண்டுகளாக ஆயாவாக பணிபுரிகின்றார் . எங்கள் வீட்டில் இருக்கும் பாபா படத்திற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் 4 முழ மல்லிப்பூ கொண்டு வந்து மாலையாகப் போடுவது அவர் வழக்கம் . அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பார்த்தால் மாலை 2 முழத்திற்கு வளர்ந்திருக்கும். சனிக்கிழமை மாலை இன்னும் அதிகம் வளர்ந்திருக்கும் . 3.10.2024 வியாழக்கிழமை பாபாவிற்கு மல்லிப்பூ மாலை போட்டவுடன் எடுத்த படம். 4.10.2024 வெள்ளிக் கிழமை மல்லிப்பூ மாலை இன்னும் வளர்ந்த பின்பு எடுத்த படம். 5.10.2024 சனிக் கிழமை மல்லிப்பூ மாலை மேலும் வளர்ந்த பி றகு எடுத்த படம். திருமதி ரகோத்தம்மா 19 95 என்று நினைக்கிறேன். யான் மங்கை பத்திரிகையில் பொறுப்பாசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன் . யான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு பின்புறத்தில் உயரமாக ஒரு போர்டு இருந்தது. ...