நறுமணம் வீசிய திடீர் விபூதி -ராமசுப்பு- உலகில் உள்ள எல்லா நாடுகளைக் காட்டிலும் நமது பாரத தேசத்தில் தான் நமது இதயத்தில் எந்த நேரமும் பிரகாசிக்கும்படியான 'ஆத்ம ஸ்வரூபத்தில்' திளைத்திருக்கும் மஹா ஞானிகள் நிறைந்திருக்கின்றனர். நமது பாரத தேசத்தில் உள்ளது போல எங்கும் எந்த நாட்டிலும் இவ்வளவு உத்தமமான மஹான்கள் அவதாரம் செய்ததில்லை. நமது நாட்டில் ஆங்காங்கே தோன்றிய மஹான்களில் மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தி, இறைவன் மீது உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தி, சேவை மனப்பான்மை, அன்பு, உண்மை, தர்மம், போன்ற ஞான மார்க்கத்தில் கொண்டு சென்று, பக்தர்களை நல்வழியில் நடத்திச் சென்று , பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர் பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா . சமீபத்தில் ஒருநாள் ஸ்ரீ சாய் பக்தரான, அருமை நண்பர் திரு.யாழ் சுதாகர் அவர்கள், என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு, பகவான் ஸ்ரீ சத்தியசாய்பாபா அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் ஏதாவது தங்களிடம் இருந்தாலோ, அல்லது உங்களுக்கோ, மற்ற உங்கள் நண்பர்களுக்கோ ஏற்பட்டிருந்தாலோ நீங்கள் எனக்கு எழுதி அனுப்புங்கள், அதை என...
Comments
Post a Comment