Posts

Showing posts from February, 2025

“ஆப்ரேஷன் நடந்தபோது பாபா அருகில் இருந்தார் என்று சொன்னீர்களே சைட் எஃபெக்ட் ஆக மூளை பாதிக்கப்படுகிறது என்று அவருக்கு தெரியாதா? அவர் நினைத்திருந்தால் அதை தடுத்திருக்கலாமே…”

Image
  பகுத்தறிவாளனும் , பரதேசியும் ….  - யாழ் சுதாகர்- அப்போது எனக்கு 13 வயது இருக்கும் . நாங்கள் குடியிருந்த கந்தர்மடம் பலாலி ரோட்டின் அருகில் மண்டைதீவைச் சேர்ந்த ஒரு அம்மையார் தங்கியிருந்தார். அங்கே   பூஜை அறையில் இருந்த சத்ய சாய்பாபாவின் படத்திலிருந்து துடைக்க துடைக்க விபூதி கொட்டிக் கொண்டே இருந்தது . மெய்சிலிர்க்க வைக்கும் இந்த செய்தி அறிந்து மண்டைதீவு அம்மையார் வீட்டில் தாராளமான பக்தர்கள் வந்து வணங்கி விட்டு சென்றார்கள். திடீரென வீட்டை விட்டு முற்றத்திற்கு வந்து அந்த அம்மையார் ஆகாயத்தை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பி “ அதோ முருகப் பெருமான் தெரிகின்றார் என்று மெய் சிலிர்க்கச் சொன்னார் . சாய்பாபாவை நேசிப்பவர்களை தேடி மற்ற தெய்வங்களும்   வரும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.   நான் மங்கை பத்திரிகையில் பொறுப்பு ஆசிரியராக இருந்த போது சாந்தி ராமமூர்த்தி என்ற சகோதரி சத்யசாயி அற்புதங்களை எல்லாம் ஒரு தொடராக எழுதி வந்தார். அப்போது தான் எனது மகன் பிறந்தான் . முதற்பிள்ளை ஆனால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. குழந்தையின் இதயத்தில் ஓட்டைகள் இருப்பதாக...

அப்போது எதிர்பாராதவிதமாக வானத்திலே ஒரு வானவில் ஒன்று தோன்றியது. ஆனால் அந்த வானவில் வளைந்து இருக்காமல் நேர்கோடு போல நிமிர்ந்து வானத்தில் நின்று இருப்பது போல தோன்றியது.

  வானவில் சொன்ன அற்புதம் "அருள்ஞானி" -ராமசுப்பு- அடியேன் ஒரு அற்புதத்தை எழுதி அனுப்பி இருக்கிறேன். இது எனது நண்பர் பாபாவின் பக்தரான வக்கீல் சொன்னது.  அவர் இப்போது பல பதவிகள் வகித்து   சென்னையில் High Court Judge -ஆக  உள்ளார். இவர் பாபா பக்தர். எனது நீண்ட நாளைய நண்பர். என்றோ என்னிடம் அவர் சொன்னதை நினைவில் வைத்து எழுதி அனுப்பி இருக்கிறேன். ' ஸ்ரீ  சாய்ராம்' என்றால் அதிலே அமைதி, ஆர்வம், ஒளிமயமான இறைவனின் காட்சி எல்லாம் அடங்கி இருக்கிறது. ' SAI '  என்பதில் ' S 'என்ற எழுத்து ' Service ' அதாவது சேவை என்பதைக் குறிக்கிறது. ' A ' என்ற எழுத்து ' Awareness 'அதாவது விழிப்புணர்வு ஊட்டக் கூடியது என்பதைக் குறிக்கிறது. ' I 'என்ற எழுத்து ' Illuminatio n' சீரியஒளி அல்லது பிரகாசம் என்பதைக் குறிக்கிறது. ஆக ' SAI ' என்றால் சேவையில் தொடங்கி விழிப்புணர்வு என்ற பக்தி மார்க்கத்தில் தொடர்ந்து, பிரகாசமான ஒளி என்ற ஞானத்தில் முடியும் ஒரு ஆன்மீக வழி என்பதாகும். ஒரு வெளிநாட்டுப் பெண்மணி   ஸ்ரீ  சத்ய சாய் பாபாவின் உண்மையான சாய் பக்தராக ...

நான் வீபூதியை என் நெற்றியில் பூசிக் கொள்ளவுமில்லை. அப்படி இருக்க இந்த வீபூதியின் நறுமணம் எப்படி வந்தது. எங்கிருந்து வந்தது?

  நறுமணம் வீசிய திடீர் விபூதி -ராமசுப்பு- உலகில் உள்ள எல்லா நாடுகளைக் காட்டிலும் நமது பாரத தேசத்தில் தான் நமது இதயத்தில் எந்த நேரமும் பிரகாசிக்கும்படியான  'ஆத்ம ஸ்வரூபத்தில்' திளைத்திருக்கும் மஹா ஞானிகள் நிறைந்திருக்கின்றனர். நமது பாரத தேசத்தில் உள்ளது போல எங்கும் எந்த நாட்டிலும் இவ்வளவு உத்தமமான மஹான்கள் அவதாரம் செய்ததில்லை. நமது நாட்டில் ஆங்காங்கே தோன்றிய மஹான்களில் மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தி, இறைவன் மீது உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தி, சேவை மனப்பான்மை, அன்பு, உண்மை, தர்மம், போன்ற ஞான மார்க்கத்தில் கொண்டு சென்று, பக்தர்களை நல்வழியில் நடத்திச் சென்று , பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர் பகவான்    ஸ்ரீ  சத்யசாயிபாபா . சமீபத்தில் ஒருநாள்  ஸ்ரீ   சாய் பக்தரான, அருமை நண்பர் திரு.யாழ் சுதாகர் அவர்கள், என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு, பகவான்  ஸ்ரீ  சத்தியசாய்பாபா அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் ஏதாவது தங்களிடம் இருந்தாலோ, அல்லது உங்களுக்கோ, மற்ற உங்கள் நண்பர்களுக்கோ ஏற்பட்டிருந்தாலோ நீங்கள் எனக்கு எழுதி அனுப்புங்கள், அதை என...