பகுத்தறிவாளனும், பரதேசியும்….
-யாழ் சுதாகர்-
அப்போது எனக்கு 13 வயது இருக்கும்.நாங்கள் குடியிருந்த கந்தர்மடம் பலாலி ரோட்டின் அருகில் மண்டைதீவைச்
சேர்ந்த ஒரு அம்மையார் தங்கியிருந்தார்.
அங்கே பூஜை அறையில் இருந்த சத்ய சாய்பாபாவின்
படத்திலிருந்து துடைக்க துடைக்க விபூதி கொட்டிக் கொண்டே இருந்தது. மெய்சிலிர்க்க
வைக்கும் இந்த செய்தி அறிந்து மண்டைதீவு அம்மையார் வீட்டில் தாராளமான பக்தர்கள்
வந்து வணங்கி விட்டு சென்றார்கள்.
திடீரென வீட்டை விட்டு முற்றத்திற்கு
வந்து அந்த அம்மையார் ஆகாயத்தை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பி “அதோ முருகப்
பெருமான் தெரிகின்றார் என்று மெய் சிலிர்க்கச் சொன்னார். சாய்பாபாவை நேசிப்பவர்களை தேடி மற்ற
தெய்வங்களும் வரும் என்பதற்கு இது ஒரு
நல்ல உதாரணம்.
நான் மங்கை பத்திரிகையில் பொறுப்பு
ஆசிரியராக இருந்த போது சாந்தி ராமமூர்த்தி என்ற சகோதரி சத்யசாயி அற்புதங்களை
எல்லாம் ஒரு தொடராக எழுதி வந்தார். அப்போது தான் எனது மகன் பிறந்தான். முதற்பிள்ளை
ஆனால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. குழந்தையின் இதயத்தில் ஓட்டைகள்
இருப்பதாகவும் ASD VSD என்ற வகை ஆப்பரேஷன் செய்தால் தான் அவனது ஆயுட்காலம் நீடிக்கும்
என்றும் டாக்டர்கள் சொன்னார்கள். ஆப்பரேஷனக்கு ஒன்றரை இலட்சத்திற்கு மேல் தேவைப் பட்டது. அதை திரட்டுவதற்குள் ஏழு மாதம் ஓடிவிட்டது.
டாக்டர் பாலகிருஷ்ணன் என்ற இதய நோய்
இதய நோய் நிபுணர் தான் ஆப்பரேஷன்
செய்தார். என்னைப் பற்றியும், எனக்கு இதய நோய் கொண்ட ஒரு குழந்தை இருப்பதாகவும் சாந்தி
ராமமூர்த்தியின் அப்பாவுக்கு தெரியாது. ஆப்பரேஷன் நடந்த அன்று சாந்தி ராமமூர்த்தியின்
தந்தை ஒரு கனவு கண்டார்: “கே ஆர் ஆப்பரேஷன் பண்ணிய போது நானும் அருகில் இருந்தேன், ஆப்ரேஷன்
சக்சஸ் என்று பாபா சொன்னார்” சாந்தி ராமமூர்த்தியின் அப்பாவுக்கு தலையும் புரியவில்லை, வாழும்
தெரியவில்லை. மகளிடம் தாம் கண்ட கனவைப் பற்றி அவர் சொன்ன போதுதான், என்னைப்
பற்றியும் என் குழந்தையின் சத்திர சிகிச்சை பற்றியும் அவர் அறிந்து கொண்டார். மெய்சிலிர்த்த
சாந்தி உடனடியாக எங்களை போனில் தொடர்பு கொண்டு இந்த கனவைப் பற்றி சொல்லி விட்டு, ஆப்பரேஷன்
செய்த டாக்டரின் பெயர் என்ன என்று கேட்டார்.
டாக்டர் பாலகிருஷ்ணன் என்று சொன்னோம்
பாபா அப்படிச் சொல்லவில்லையே. டாக்டர் கே ஆர் தான் பண்ணியதாக சொன்னார் என்று சாந்தி ராமமூர்த்தி
குழம்பினார். பிறகுதான் எல்லாருக்கும் ஒரு உண்மை தெரிய வந்தது. கே ஆர் என்பதுதான்
டாக்டர் பாலகிருஷ்ணனின் இனிஷியல். அந்த பெயரில் தான் எல்லாரும் அவரை அழைப்பார்களாம். அதனால்தான்
பாபாவும் கே ஆர் என்று சொன்னார். ஆஸ்பத்திரியில் இந்த ஆப்பரேஷன் பற்ற சர்ட்டிபிகேட் கொடுத்தார்கள்
அதில் அசிஸ்டன்ட் டாக்டர் இந்த இடத்தில் சாய்ராம் என்று டைப் பண்ணி இருந்தது. குழந்தைக்கு
வெற்றிகரமாக எல்லாம் முடிந்த சந்தோஷத்தில் நாங்கள் இருந்தபோது குழந்தைகள் நல
டாக்டர் சுரேஷ் சொன்னர் “இந்த குழந்தை சாதாரணமான குழந்தையாக இல்லை மூளை வளர்ச்சி குறைந்த
குழந்தையாக மாறி விட்டது, ASD
VSD ஆப்ரேஷன் செய்யும் கொள்ளும் குழந்தைகளில்
ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு சைட் எபெக்ட் ஆக மூளை பாதிக்கப்படுகிறது”. எங்கள் கவலை
இரண்டு மடங்கானது.
குழந்தைக்கு சாய்ராம் என்று பெயர்
வைத்தோம். 22 வயதாகியும் அவனுக்கு பேச்சு வரவில்லை. சாப்பாடு கூட யாராவது ஊட்டி விட்டால் தான்
சாப்பிடுவான். அவனுக்கு பேச்சு வரவில்லை. அம்மா என்று கூட அவனால் சொல்ல முடிவதில்லை. அவனை
பார்த்தால் 10 வயது குழந்தை போல் இருந்தான். வலிப்பு நோயால்
மிகவும் கஷ்டப்பட்டான். இயற்கை உபாதைகளைக் கூட அவனுக்கு சொல்ல தெரியவில்லை. 22 வயது வரை பேம்பர்ஸ் தான் கட்டினோம்.
எல்லாருக்குமே ஒரு மனசாட்சி உண்டு. ஆனால் எனக்கு
மட்டும் இரண்டு மன சாட்சிகள். ஒரு மனசாட்சியின் பெயர் பகுத்தறிவாளன் சுதாகர், இரண்டாவது
மனசாட்சியின் பெயர் பரதேசி சுதாகர்.
“ஆப்ரேஷன் நடந்தபோது பாபா அருகில் இருந்தார் என்று சொன்னீர்களே சைட் எஃபெக்ட் ஆக
மூளை பாதிக்கப்படுகிறது என்று அவருக்கு தெரியாதா? அவர் நினைத்திருந்தால் அதை தடுத்திருக்கலாமே…” என்றான்
பகுத்தறிவாளர் சுதாகர்.
பரதேசி சுதாகர் பதில் சொன்னான்: “ஒருவன் எத்தகைய
பக்தனாக இருந்தாலும் ஊழ்வினையை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்”.
தெய்வத்தின் அவதாரங்கள் கூட
ஊழ்வினைக்கு தப்பியதில்லை!
மகான்களுக்கு கூட கூடிய நோய்கள்
வந்திருக்கின்றன.
ரமண மகரிஷிக்கு புற்றுநோய்
கண்டறியப்பட்ட போது, அது எனது ஊழ்வினை காரணமாக வந்திருக்கிறது. மருத்துவம்
தேவை இல்லை என்றாராம் ரமணர்!
படத்தில் லேட் சாய்ராம் வயது 22
www.Freevisitorcounters.com
Comments
Post a Comment