“ஆப்ரேஷன் நடந்தபோது பாபா அருகில் இருந்தார் என்று சொன்னீர்களே சைட் எஃபெக்ட் ஆக மூளை பாதிக்கப்படுகிறது என்று அவருக்கு தெரியாதா? அவர் நினைத்திருந்தால் அதை தடுத்திருக்கலாமே…”
பகுத்தறிவாளனும் , பரதேசியும் …. - யாழ் சுதாகர்- அப்போது எனக்கு 13 வயது இருக்கும் . நாங்கள் குடியிருந்த கந்தர்மடம் பலாலி ரோட்டின் அருகில் மண்டைதீவைச் சேர்ந்த ஒரு அம்மையார் தங்கியிருந்தார். அங்கே பூஜை அறையில் இருந்த சத்ய சாய்பாபாவின் படத்திலிருந்து துடைக்க துடைக்க விபூதி கொட்டிக் கொண்டே இருந்தது . மெய்சிலிர்க்க வைக்கும் இந்த செய்தி அறிந்து மண்டைதீவு அம்மையார் வீட்டில் தாராளமான பக்தர்கள் வந்து வணங்கி விட்டு சென்றார்கள். திடீரென வீட்டை விட்டு முற்றத்திற்கு வந்து அந்த அம்மையார் ஆகாயத்தை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பி “ அதோ முருகப் பெருமான் தெரிகின்றார் என்று மெய் சிலிர்க்கச் சொன்னார் . சாய்பாபாவை நேசிப்பவர்களை தேடி மற்ற தெய்வங்களும் வரும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். நான் மங்கை பத்திரிகையில் பொறுப்பு ஆசிரியராக இருந்த போது சாந்தி ராமமூர்த்தி என்ற சகோதரி சத்யசாயி அற்புதங்களை எல்லாம் ஒரு தொடராக எழுதி வந்தார். அப்போது தான் எனது மகன் பிறந்தான் . முதற்பிள்ளை ஆனால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. குழந்தையின் இதயத்தில் ஓட்டைகள் இருப்பதாக...