அப்போது எதிர்பாராதவிதமாக வானத்திலே ஒரு வானவில் ஒன்று தோன்றியது. ஆனால் அந்த வானவில் வளைந்து இருக்காமல் நேர்கோடு போல நிமிர்ந்து வானத்தில் நின்று இருப்பது போல தோன்றியது.
வானவில் சொன்ன அற்புதம்
"அருள்ஞானி"
-ராமசுப்பு-
அடியேன் ஒரு அற்புதத்தை எழுதி அனுப்பி இருக்கிறேன். இது எனது நண்பர்
பாபாவின் பக்தரான வக்கீல் சொன்னது. அவர் இப்போது பல பதவிகள் வகித்து சென்னையில் High Court Judge -ஆக உள்ளார்.
இவர் பாபா பக்தர். எனது நீண்ட நாளைய நண்பர். என்றோ என்னிடம் அவர்
சொன்னதை நினைவில் வைத்து எழுதி அனுப்பி இருக்கிறேன்.
'ஸ்ரீ சாய்ராம்' என்றால் அதிலே அமைதி, ஆர்வம், ஒளிமயமான இறைவனின் காட்சி
எல்லாம் அடங்கி இருக்கிறது.
'SAI' என்பதில் 'S'என்ற எழுத்து 'Service' அதாவது சேவை என்பதைக் குறிக்கிறது.
'A' என்ற எழுத்து 'Awareness'அதாவது விழிப்புணர்வு ஊட்டக் கூடியது என்பதைக்
குறிக்கிறது.
'I'என்ற எழுத்து 'Illumination' சீரியஒளி அல்லது பிரகாசம் என்பதைக் குறிக்கிறது.
ஆக 'SAI' என்றால் சேவையில் தொடங்கி விழிப்புணர்வு என்ற பக்தி மார்க்கத்தில்
தொடர்ந்து, பிரகாசமான ஒளி என்ற ஞானத்தில் முடியும் ஒரு ஆன்மீக வழி
என்பதாகும்.
ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் உண்மையான சாய்
பக்தராக இருந்தாள். அவர் ஒவ்வொரு நாளும் 'சாய்ராம்' 'சாய்ராம்' என்று
அவரையே தியானம் செய்து கொண்டிருந்தாள். அவள் பேச்சிலும், மூச்சிலும்
சாய்ராமைத் தவிர வேறு எதுவும் கிடையாது. சாய்ராம் மீது அப்படியொரு பக்தி.
இவளுக்கு முன்பின் ஸ்ரீ சத்ய சாயியைத் தெரியாது. யாரோ ஒருவர் என்றோ
ஒருநாள் ஸ்ரீ சத்ய சாய்பாபாவைப் பற்றியும், அவரது அற்புதங்களையும் இவளிடம்
எடுத்துக் கூறியதை இவள் கேட்டாள். சாய்ராம் பற்றி அவள் கேள்விப்பட்டதும்,
தன்னை மறந்து அவள் அவரைப் பார்க்க ஆசைப்பட்டு, விமானத்தில் பறந்து
வந்து ஸ்ரீ சத்ய சாய்பாபாவைச் சந்தித்தார். பாபாவின் தரிசனம் என்று
கிடைத்ததோ, அன்றே அவள் பாபாவின் கருணை பார்வைபட்டு. அவரின் அன்பிலே
கட்டுண்டு போனாள்.
பாபாவின் முழுநேர பக்தையானாள்.
"எப்பொழுது பார்த்தாலும், எதற்கெடுத்தாலும், பேச்சுக்குப் பேச்சு "சாய்ராம்"
என்று ஏதோ உளறிக் கொண்டிருக்கிறாயே ! அப்படி என்ன அவர் பெரிய ஞானியா? "
என்று அப்பெண்மணியின் கணவன் அவள் மீது கோபம் கொன்று எரிந்து
விழுவான்.
" இப்பொழுதே போவோம் வாருங்கள் சாய்பாபாவை சந்தித்து ஆசி பெறுவோம்.
புறப்படுங்கள், நமது வாழ்க்கைப் பாதை மேலும் சீரடையும் " என்று கணவனை
அழைத்தாள் அந்தப் பெண்மணி.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவைக் கொஞ்சமும் விரும்பாத அந்தக் கணவனுக்கு, தனது
மனைவி பாபா மீதுள்ள பக்தியைக் குறைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு
மனைவியுடன் புறப்பட்டு அவளுடன் வந்தான்.
பயணத்தின் போது அவன் மனதில் " அந்த சாய்பாபாவைப் பார்த்து தனது
ஆத்திரம் தீர பல கேள்விகளைக் கேட்ட வேண்டும். அவரைத் திக்குமுக்காட வைத்து,
தனது மனைவி முன்பு அவரைத் தாழ்த்த வேண்டும் " என்றெல்லாம் நினைத்துக்
கொண்டே வந்தான்.
ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், அவர்கள் அங்கு தங்கி இரவைக் கழித்து
விட்டு, அடுத்த நாள் புறப்பட்டுப் போக வேண்டி இருந்தது.
அது ஒரு நதிக்கரை. நதிக்கரையோரம் கணவன், மனைவி இருவரும்
மகிழ்வோடு நடந்து கொண்டு வந்திருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக வானத்திலே ஒரு வானவில் ஒன்று
தோன்றியது. ஆனால் அந்த வானவில் வளைந்து இருக்காமல் நேர்கோடு போல
நிமிர்ந்து வானத்தில் நின்று இருப்பது போல தோன்றியது.
பொதுவாக வானவில் என்பது மழைச் சாரலில், சூரிய ஒளியின் எதிப்புறம் தான்
தோன்றும். ஆனால் அன்று மழை இல்லை. அதே போல சூரியன் எப்பக்கம் உள்ளதோ
அப்பக்கமே வானவில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
இது எப்படி முடியும் என்று அவன் மனதில் ஆராய்ந்தான் அக் கணவன்.அன்று
இரவு முழுவதும் அந்த அதிசயத்தை நினைத்துக் கொண்டே உறங்காமல் இருந்து பின்
உறங்கிப் போனான்.
அடுத்த நாள் காலை பயணத்தைத் தொடர்ந்த அவர்கள், ஒரு குறிப்பிட்ட
நேரத்தில் பகவான் சாயிபாபாவின் பிருந்தாவனத்தை அடைந்தனர்.
பிருந்தாவனத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்தனர். அவர்களின்
நடுவில் அந்த வெளிநாட்டு அம்மையாரும், கணவனும் அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரத்தில் பாபா வந்து அனைவருக்கும் காட்சி அளித்தார். பக்தர்கள்
பரவசமடைந்தனர். பாபாவை்ப் பார்த்து சிலர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சிலர்
அவர் பாதத்தில் விழுந்து தொட்டு வணங்கினார்கள்.
அந்த ஆயிரக்கணக்கான பக்க்தர்கள் நடுவில் அமர்ந்திருந்த அந்த வெளிநாட்டு
கணவனை அழைத்தார் பாபா. அவனும் அருகில் போய் நின்றான்.
பாபா அவனை ஆசீர்வதித்துவிட்டு " உன் மனைவி என்னை பூஜிக்கிறாள்..
நீயோ தடுக்கிறாய் எவ்வளவோ எடுத்துச் சொல்லி, உன்னை என் பக்தனாக்க
முயற்சிக்கிறாள். ஆனால் அது முடியவில்லை. நீ என்னை தரிசிக்க வந்ததே, நான்
உன்னை அழைத்ததால் தான் . என் அனுமதியின்றி யாரும் என்னை அணுக முடியாது.
நீ ஊரிலிருந்து புறப்பட்டு இங்கு வரும் முன்பே நீ என்னிடம் ஆயிரம் கேள்விகள்
கேட்டு என்னை திக்குமுக்காட வைக்க வேண்டுமென்றும், என்னைப் பார்த்து
திடீரென்று ஒரு வானவில்லை உங்களால் தோற்றுவிக்க முடியுமா என்று பரீட்சை
வைக்க வேண்டுமென்றும், நினைத்திருந்தாய். உண்மைதானே?
தன் மனதில் நினைத்ததையெல்லாம் சாய்ராம் அப்படியே கூறுகிறாரே! இது
எப்படி? என்று வியந்து போன அவன் "ஆமாம் இப்படியெல்லாம் நினைத்தது
உண்மைதான் " என்று ஒப்புக் கொண்டான்.
மீண்டும் பாபா அவனைப் பார்த்துக் கேட்டார். " நீ நேற்று ஒரு வானவில்லைப்
பார்த்தாயா? அந்த வானவில் வித்தியாசமாக இருந்ததா? வித்தியாசமான
சூழ்நிலையில் இருந்ததல்லவா? உனக்கு மீண்டும் அந்த வானவில்லை இங்கே
காட்டட்டுமா? நீ பார்க்கிறாயா? என்று கேட்டார்.
கேள்வி மேல் கேள்வி ஆயிரம் கேட்க வேண்டும் என்று வந்த அந்த
வெளிநாட்டுக் கணவனைப் பார்த்து பாபா கேள்வி மேல் கேள்வி கேட்டார். கேள்வி
கேட்க வேண்டுமென்று வந்த அவனோ எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போய்
ஒரே திகைப்பில் அசையாமல் நின்றான்.
அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.
பாபா வழக்கம் போல் பக்தர்களுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டே தன்
போக்கில் போனார்.
பாபாவை உணர்ந்து கொண்ட அவ்வம்மையாரின் கணவன், அப்பொழுது
முதலே பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பக்தனாகி அவனுடைய மனைவியுடன்
சேர்ந்து கொண்டான்.
-ஜெய் சாய்ராம்-
-ஜெய் ஸ்ரீ ராம்-
பாபாவின் பாதங்கள்
-ராமசுப்பு-
ஸ்ரீ ராமபிரானுடைய பாதங்கள் பட்டு கல்லாக இருந்த அகலிகை பெண்ணாக
மாறினாள் என்று இராமாயணம் கூறுகிறது.
மூன்றாவது பாதத்தைப் பலிச்சக்கரவர்தியின் தலையில் வைத்து உலகளந்த பெருமாள்
தனது மூன்றாவது அடியை அளந்தால், பலிச்சக்கரவர்த்தி பாதாள உலகம் சென்று பின் மோட்சமடைந்தான்.
ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பாதத்தடியிலேயே மஹாலஷ்மி அமர்ந்திருக்கிறாள்.
இப்படியாக இறைவன் பாதங்கள் போற்றப்படுவது போல மஹான்களின் பாதங்களும் போற்றப்படுகின்றன.
பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் பாதங்கள் காலை வேளையில் மலர்ந்திருக்கும்
தாமரை மலர் போன்று இருக்குமாம்.
மதியத்தில் பனிமலையின் வெண்மை போல மின்னுமாம்.
மாலையில் தங்க நிறத்தில் ஜொலிக்குமாம்.
ஆக பாபாவின் பாதங்கள் இப்படி மூவகையில் இருந்து பக்தர்களுக்கு அருள்
புரியுமாம்.
எழுதியவர்:- ராமசுப்பு, 19/18, புவனேஸ்வரி நகர்,
II - வது தெரு ஹோலஷ்மி Flats, குரோம்பேட்டை,
சென்னை - 600 044.
CELL : 91760 04409
Comments
Post a Comment