ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள் பாகம் – 2
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள் பாகம் – 2
அப்போது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நாங்கள் மந்தவெளியில் வசித்த போது வியாழக் கிழமைகளில் "சுந்தரம் ஹால் பஜனையில் கலந்து கொள்வது வழக்கம்.
என் தந்தை பொறியாளர் M.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு 60 வயதில் ஸ்ட்ரோக் வந்து வலது பக்கம் செயலிழந்து போனது. அப்போது எங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சொல்லிமாளாது.
அந்த நேரம் சாயிராம் சாயிராம் என பாபாவை நினைத்து வேண்டியபடி இருந்தோம்.
பகவானின் பேரருளால் சிகிச்சையில் நல்ல பலன் கிடைக்க… மறுபடி இதய பாதிப்பு ஏற்பட்டு பேஸ் மேக்கர் பொருத்த வேண்டிய நிலை. பாபாவை முழுதாக சரணாகதி அடைந்து வீட்டில் பஜன் ஏற்பாடு செய்து முழுமனதாக வணங்க ... பாபாவின் அருட்பார்வை எங்கள் மீது விழுந்தது என்றே சொல்லலாம் .
தம்பி மூலம் பணம் ஏற்பாடாக ... நல்ல மருத்துவர் அமைய ... ஆபரேஷன் சக்ஸஸ்
ஆகி அதன்பின் என் தந்தை சில ஆண்டுகள் நன்றாக வாழ்ந்தார்கள்.
அடுத்து என் வாழ்வில் பாபா நடத்திய அற்புதம் மறக்க முடியாதது.
40 வருடங்களுக்கு முன்பு ... எனக்கு 2 வது குழந்தை பிறக்க DUE DATE நெருங்கி விட்டது. தேதி தாண்டி 15 நாட்கள் ஆகியும் வலி வரவில்லை . அப்போதெல்லாம் இப்போது மாதிரி ஸ்கேன் எல்லாம் கிடையாது. X -RAY எடுத்துப் பார்த்து உடனே சிசேரியனுக்கு ஏற்பாடு செய்தார்கள். ஆகஸ்ட் 9் ம் தேதி வியாழக்கிழமை. பாபாவின் தீவிர பக்தையாகிய நான் முழு மனதுடன் பிரார்த்தனை செய்தபடி இருந்தேன்.
டெஸ்ட் செய்து பார்த்த டாக்டர் குழந்தைக்கு ஹார்ட் பீட் குறைவாக இருக்கிறது .. பார்க்கலாம் என்று சொல்ல எனக்கு மனதிற்குள் ஒரே கலவரம் "பாபா குழந்தையை உயிரோடு காப்பாற்றி கொடுத்து விடுங்கள் பாபா .. உங்கள் பேர் தான் வைப்பேன்" என்று வேண்டிக் கொண்டேன்.
ஆபரேஷன் தொடங்கும் போது மயக்க ஊசி போட்டு… அரை மயக்கத்தில் இருந்த நேரம் பக்கத்தில் ஆரஞ்சு நிற அங்கியுடன் சத்ய சாயி பாபாவின் தோற்றம் .. அருகில் நிற்கிற தோற்றம் ... பார்த்தபடியே மயங்கி விட்டேன் என்றே சொல்லலாம். விழித்துப் பார்த்த போது பெண் குழந்தை .. ஆரோக்கியமாக இருப்பது தெரிந்தது.
கண்கள் அவர் நின்ற இடத்தையே பார்க்க ... மானசீகமாக நன்றி தெரிவித்தேன்.இப்படியாக இக்கட்டான அந்தத் தருணத்தில் பாபா பக்கத்தில் இருந்து காப்பாற்றினார் ... இதை என் வாழ்நாளில் மறக்க முடியாது ... அவளுக்கு "சத்ய லீலா" என்று பெயர் சூட்டினோம் . இப்போது அவளுக்கு திருமணமாகி ஸ்ரீ கிருஷ் , ஸ்ரீகிரித்தி என இரு குழந்தைகள்.
என் பேரன் ஸ்ரீ கிருஷ் பாலவிகாஸ் பள்ளி மாணவன் . 9th STD படிக்கும் அவன் பாலவிகாஸ் பிரார்த்தனை கூட்டங்களின் போது பக்தி பஜன் பாடல்களை அருமையாகப் பாடுவான்.
இப்படியாக ஸ்ரீ சத்ய சாயிபாபா எங்கள் வாழ்வில் இன்றளவும் ஆசீர்வதித்துவருகிறார் .
நானும் 'கீதம் மேரேஜ் மேட்சிங் சென்டர்' எனும் திருமண தகவல் மையத்தை தொடங்கி 29 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வருகிறேன் . தற்போது "கீதம் மேட்ரிமோனியல்"எனும் பெயரில் இயங்கி வருகிறது. தவிரவும் பாபாவின் அருளால் ஆன்மீக பாடல்களும் எழுதி வருகிறேன் .
என்றும் ஸ்ரீ சத்ய சாயிபாபா எங்களுடன் துணை நிற்க பிரார்த்திக்கிறேன் .
உங்கள் வாழ்க்கையில் இது போன்ற அற்புதங்களை பாபா நிகழ்த்தி இருந்தால் , எங்களுக்கு எழுதி அனுப்புங்கள் . பிரசுரிக்கிறோம். rasigantamiloldsongs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் அற்புத அனுபவங்களை எழுதி அனுப்புங்கள். word என்கிற Format -ல் unicode font -ல் டைப் செய்து அனுப்புங்கள் .
ஓம் சாய்ராம்.
அன்புடன்யாழ் சுதாகர் , மற்றும்இலால்குடி திருமுருகன்
Comments
Post a Comment